இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SP Jaganathan Passes Away : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் எஸ்.பி ஜனநாதன். அருண் விஜய், ஷாம், குட்டி ராதிகா மற்றும் பலர் நடிப்பில் வெளியான இயற்கை என படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் இவரது இயக்கத்தில் ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை, பூலோகம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இப்படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள லாபம் என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படம் இந்த வருட சம்மருக்கு வெளியாக உள்ளது.

இப்படியான நிலையில் ஜனநாதன் அவர்கள் உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் மரணம் - சோகத்தில் திரையுலகம்.