SP Jaganathan Health Status

பிரபல இயக்குனர் எஸ் பி ஜனநாதன் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SP Jaganathan Health Status : தமிழ் சினிமாவில் ஈ, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கி தனித்துவமான இயக்குனர் என பெயர் எடுத்தவர் எஸ்பி ஜனநாதன். இவர் தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்துள்ள லாபம் எடுத்து திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

உறவினர்கள் உதவியின்றி தனியாக வசித்து வரும் எஸ்பி ஜனநாதன் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மூளைச்சாவு அடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் திரைப் பிரபலங்கள் என பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எஸ்பி ஜெகநாதன் விரைவில் பூரண குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.