மாமன்னன் திரைப்படத்தின் பாடல் குறித்து சூரி வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர் சூரி. இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருந்த விடுதலை திரைப்படத்தின் பாகம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமும் தீவிரமாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சூரி ட்விட்டர் பக்கத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் பாடல் குறித்து வெளியிட்டு இருக்கும் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், “தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன், மனதை என்னமோ செய்கிறது இந்த பாடல் என்று ஏ.ஆர்.ரகுமான் இசையில் வடிவேலு குரலில் வெளியான “ராசா கண்ணு” பாடல் குறித்து பதிவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.