Thalaivar 168
தலைவர் 168 படத்தில் காமெடி நடிகர் சூரி இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் பலரும் அன்பு தொல்லை செய்து வந்தனர்.

இதனையடுத்து இப்படத்தில் காமெடி நடிகர் சூரி இணைந்திருப்பதாக நேற்று மாலை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

காமெடி நடிகர் சூரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.