YouTube video

காதலியை கரம் பிடித்த காமெடி நடிகர் அஸ்வின், ஜோடி சூப்பர் – வெளியான திருமண புகைப்படம்!

Actor Ashwin Marriage Photo : தமிழ் சினிமாவில் கும்கி, ஈட்டி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் சில படங்களில் காமெடி நடிகராக நடித்திருந்தவர் அஸ்வின்.

பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான சுவாமி நாதனின் மகன் தான் இந்த அஸ்வின்.

குழந்தைகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு உதட்டில் முத்தம் கொடுத்து கணவருடன் திருமண நாளை கொண்டாடிய ரம்பா – வைரலாகும் வீடியோ.!

இவர் சென்னை கேகே நகரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மகள் வித்யா ஸ்ரீ என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவீட்டாரின் சம்மதத்துடன் தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாக அஸ்வின் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து நேற்று ( ஜூன் 24 ) தமிழக அரசின் அறிவுரைகளில் படி வெறும் 20 பேர் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடந்துள்ளது.

இவர்களின் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அஸ்வின் திருமணத்திற்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவதால் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.