சூரரை போற்று திரைப்படம் டாப் ரேட்டிங்கில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது.

Soorarai Potru Rating in IMDb : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சூரரை போற்று. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் இத்திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியானது.

நேரடியாக OTT வழியாக வெளியானாலும் இத்திரைப்படம் அனைவராலும் கொண்டாடப்படும் படமாக அமைந்தது. தற்போது இத்திரைப்படம் ஐஎம்டிபி இணையதளத்தில் டாப் ரேட்டிங்கில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த தகவலை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.