சூரரைப் போற்று படத்தின் ஆங்கில டைட்டில் என்ன என்பது தெரியவந்துள்ளது.

Soorarai Potru English Title : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சூரரை போற்று.

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் திரைப்படத்தை தயாரித்து இருந்தது.

சூரரை போற்று படத்தின் இங்கிலீஷ் டைட்டில் என்ன தெரியுமா?

ஆஸ்கர் விருது வரை சென்று இத்திரைப்படம் கடைசி ரவுண்டில் விருது இல்லாமல் வெளியேறியது. இருப்பினும் பல்வேறு விருதுகளை வென்றது.

தற்போது இந்த திரைப்படம் சங்கை இன்டர்நேஷனல் பிலிம்ஸ் விருதுகள் விழாவில் பனோரமா பிரிவில் தேர்வாகி உள்ளது. இதன் பட்டியலில் இந்த படத்தின் டைட்டில் Praise the Brave என குறிப்பிட்டுள்ளது.