Sonia Agarwal Second Marriage
Sonia Agarwal Second Marriage

Sonia Agarwal Second Marriage : சோனியா அகர்வாலுக்கு இரண்டாவது திருமணமா? என்ற கேள்விக்குசோனியா அகர்வால் அண்மையில் ஒரு பேட்டி வாயிலாக பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதன்பின் புதுபேட்டை, 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்ட சோனியா அகர்வால் நீண்ட நாட்கள் அது நீடிக்காமல் கடைசியில் விவாகரத்தில் முடிந்தது.

வனிதா, பீட்டர் பால் திருமணத்திற்கு சம்மதமா? நடந்தது என்ன? வனிதாவின் முகத்திரையை கிழித்த பீட்டர் பாலின் மகன்!

அதன் பின், கடந்த ஆண்டு அருண் விஜய்க்கு அம்மாவாக தடம் படத்தில் நடித்திருந்தார். அதே நேரத்தில், அவர் சோலோ ஹீரோயினாக நடித்த தனிமை படமும் வெளியாகி இருந்தது. திருமணம் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை சிலருடன் இணைந்து தொடங்கியுள்ளார்.

தனது சொந்த தொழிலுக்கான விளம்பரத்தில் தானே நடித்தார். அதில் அவர் திருமணம் கோலத்தில் இருந்ததால் அவரின் இரண்டாவது திருமணம் பற்றிய வதந்திகள் காது வழி செய்தியாக பரவத் தொடங்கியது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அண்மையில் ஒரு பேட்டியில் “எனக்கு திருமணம் என்றால் நானே முதல் ஆளாக வந்து அறிவிப்பேன்” என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.