விகடன் விருது நிகழ்ச்சியில் சாய்பல்லவிக்கு விருது வழங்கிய சிவகார்த்திகேயனின் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோ அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் SK21 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க இருக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு அண்மையில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஆனந்த விகடன் விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் சிறந்த நடிகைக்கான விருதை சாய் பல்லவிக்கு வழங்கியுள்ளார். இந்த க்யூட்டான ஜோடியின் புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்களால் ட்ரெண்டிங்காகி வருகிறது.