கோலாகலமாக தொடங்கியுள்ளது சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் இணையும் திரைப்படம்.

SK 21 Movie Shooting Begins : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி படிப்படியாக உயர்ந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக மாவீரன், அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

சிவகார்த்திகேயனின் 21வது திரைப்படமாக உருவாக்கும் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது பூஜையுடன் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.

இது குறித்த வீடியோவை சிவகார்த்திகேயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.