நடிகை சிவகார்த்திகேயன் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து அது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Sivakarthikeyan Vs BJP : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்கிரி ஆர்டிஸ்டாக தங்கள் பயணத்தை தொடங்கிய இவர் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர், அயலான் உள்ளிட்ட திரை படங்கள் ரிலீசாக உள்ளன. டாக்டர் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அயலான் திரைப்படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய் ஒரு ரவுடி.. பணம் கொடுத்து எனக்கு எதிரா பேச வைக்கிறார் – நடிகை வெளியிட்ட சர்ச்சை வீடியோ

இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பாஜகவில் இணைய இருப்பதாக யூடியூப் சேனல்கள் வழியாக தகவல் பரவியது.

இதனையடுத்து தற்போது அவரது தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல் உண்மை அல்ல என தெரிவித்துள்ளனர்.

மேலும் சிவகார்த்திகேயன் எந்தவித கட்சியிலும் சேர மாட்டார், அரசியலில் ஈடுபட மாட்டார் எனவும் தெரிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து இப்படி ஒரு விளக்கம் அளிக்கப்பட்டதையடுத்து நடிகையும் பிக் பாஸ் தமிழ் பிரபலமான காயத்ரி ரகுராம் சிவகார்த்திகேயன் விருப்பப்பட்டால் பாஜகவில் இணையலாம் என கூறியுள்ளார்.