Sivakarthikeyan name titled as Engal veettu Pillai : Anu Emmanuel, aishwarya rajesh, Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Sivakarthikeyan name titled as Engal veettu Pillai :

வருஷத்துக்கு ஒரு படம்னு நிதானமா நடிச்சிட்டு வந்த சிவகார்த்திகேயன், இப்போ வழக்கத்துக்கு மாறா ஒரே நேரத்தில அடுத்தடுத்து பல படங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு.

அண்மையில ஹீரோ படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், இப்போ பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்பில பங்கேற்று இருக்காரு. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

குடும்ப செண்டிமெண்டை முன்னிலைப்படுத்தி உருவாகிவரும் இப்படத்துக்கு எங்கள் வீட்டு பிள்ளை என தலைப்பு வைத்துள்ளார்களாம். இது எம்.ஜி.ஆர் பட தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

மெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் – தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் – காரணம் என்ன தெரியுமா?

தமிழ்ல துப்பறிவாளன் படம் மூலமா அறிமுகமான அனு இமானுவேல் இந்த படத்தில சிவகார்த்திகேயன் ஜோடியா நடிக்கிறாங்க.

மேலும் கனா படத்தில சேர்ந்து நடிச்ச சிவகார்த்திகேயன் – ஐஷ்வர்யா ராஜேஷ் கூட்டணி இந்த படத்தில அண்ணன் – தங்கையா நடிக்க இருக்காங்க.

இவங்க போக யோகி பாபு, சூரின்னு ரெண்டு காமெடி நட்சத்திரங்கள் இந்த படத்தில இணைஞ்சிருக்காங்க. மேலும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.