Mersal Vs Suttu Pidikka Utharavu  : Athulya Ravi, Vikranth, Suseenthiran, Mysskin, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

Mersal Vs Suttu Pidikka Utharavu  :

மெர்சல் படத்திற்கு BJP எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தியது போல சுட்டு பிடிக்க உத்தரவு படத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து களமிறங்கியுள்ளனர்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் இயக்குனரான ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் மிஸ்கின், சுசீந்திரன், விக்ராந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் சுட்டு பிடிக்க உத்தரவு.

டிராகன் பழத்தில், இவ்வளவு நன்மைகளா ?தெரிந்து கொள்வோமா!

கடந்த வாரம் அதாவது ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகி இருந்த இந்த படம் விறுவிறுப்பான திரைக்கதையை கொண்ட திரில்லர் படமாக அமைந்ததால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் போஸ்டரில் காந்தி படம் இடம் பெற்றிருப்பதாகவும், அவரின் மீது குண்டுகள் பாய்வது போல் ஏன் போஸ்டரை உருவாக்க வேண்டும்? வன்முறைக்கும் காந்திக்கும் என்ன சம்மந்தம்? என்ற கேள்வியை முன் வைத்து காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அடித்தது ஜாக்பாட்.. மெகா ஹிட் இயக்குனர் படத்தில் சாய் பல்லவி.!

அதுமட்டுமில்லாமல் இந்திய ரூபாய் நோட்டுகளை அவமதிப்பது போல இந்த போஸ்டர் இருப்பதாகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பி ராணிப்பேட்டையில் உள்ள பிரபல தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் காந்தி படம் இடம் பெற்றிருக்கும் போஸ்டரை படக்குழு உடனடியாக அனைத்து தியேட்டர்களில் இருந்தும் நீக்க வேண்டும், இந்த சம்பத்திற்காக படக்குழு மன்னிப்பும் கேட்க வேண்டும் என கூறி கோஷமிட்டுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.