சூப்பர் ஹிட் பட இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் நடிக்க வேண்டிய படத்தை கைப்பற்றியுள்ளார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan in Ramkumar Direction : தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால் அமலாபால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ராட்சசன். வித்தியாசமான திரைக்கதையால் மிரளவைத்த இந்த திரைப்படத்தை ராம் குமார் என்பவர் இயக்கியிருந்தார்.

ரோகித் விருப்பத்தை, கோலி நிறைவேற்றுவாரா?

சூப்பர் ஹிட் பட இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் நடிக்க வேண்டிய படத்தை கைப்பற்றிய சிவகார்த்திகேயன் - வெளியான செம மாஸ் தகவல்

இந்த படத்திற்கு பிறகு இவர் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் மிகப்பெரிய மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதாவது தனுசுக்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

திடீரென கதறி அழுத Varalaxmi Sarathkumar – கலாய்த்த இயக்குனர்!

சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாக்கும் இந்த படத்திற்கு வால் நட்சத்திரம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மிக விரைவில் எதிர்பார்க்கலாம் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.