Siva Next Movie

Siva Next Movie : விஜய் சேதுபதியின் வசனங்களை காப்பி அடித்து பட்டி டிங்கரிங் பார்த்து அடுத்த பட தலைப்பை அறிவித்துள்ளது சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்திகேயன் தற்போது தயாரிப்பிலும் கலக்க தொடங்கியுள்ளார். தன்னுடைய முதல் தயாரிப்பாக கனா படத்தை தயாரித்திருந்தார்.

ஆரம்பமே சிக்ஸர் அடிக்க தன்னுடைய அடுத்த தயாரிப்பாக தற்போது பிளாக் ஷீப் டீமை வைத்து புதிய படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் ஹீரோவாக விஜய் டிவி தொகுப்பாளர் ரியோ ராஜ் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீஸர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில் விஜய் சேதுபதியின் ட்ரைலர் வசனங்களை காபி அடித்து பட்டி டிங்கரிங் பார்த்து தங்களது படத்தின் டைட்டில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் தான் சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர் வசனங்களே சாந்தி நிலையம் படத்தில் இருந்து சுட்டப்பட்டதாக வீடியோ மூலம் நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.

தற்போது அவர்களிடம் சூப்பர் டீலக்ஸ் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படமும் சிக்கியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.