Siva and Vijay Combo

Siva and Vijay Combo : தல அஜித்தை தொடர்ந்து விரைவில் விஜயுடன் இணைந்து ஒரு படத்தை இயக்குவேன் என இயக்குனர் சிவா அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சிறுத்தை படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி இருந்தவர் சிவா.

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித்தை வைத்து தொடர்ச்சியாக வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என 4 படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது சிறுத்தை சிவா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் தளபதி விஜயுடன் இணைந்து பணியாற்றும் ஆசை உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு சிறுத்தை சிவா நிச்சயம் இணைந்து பணியாற்றுவேன். எனக்கு விஜயை பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே நன்றாக தெரியும்.

விஜயின் அப்பா சந்திரசேகர் சாரும் என்னுடைய அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். மேலும் நான் வேதாளம் படத்தை இயக்கி கொண்டிருந்த போது விஜயை சந்தித்துள்ளேன். விரைவில் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here