“சீதா ராமம்” படத்தின் இரண்டாவது பாடலுக்கான லிரிக்ஸ் வீடியோவை துல்கர் சல்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்மூட்டி அவர்களின் மகன் தான் துல்கர் சல்மான். பிரபல மலையாள நடிகர் ஆன இவர் தமிழில் “வாயை மூடி பேசவும்”, “ஓ காதல் கண்மணி” போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஹே சினாமிகா” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்குனர் ஹனு ராகவாபுடி இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம் “சீதா ராமம்”. இதில் இவருக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார்.

மேலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களாக ராஷ்மிகா மந்தனா மற்றும் சுமந்த் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். சப்னா சினிமா தயாரித்துள்ள இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வீடியோ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் ஜூலை 4 தேதி வெளியாகும் என்று படக்குழு ப்ரோமோ மூலம் அறிவித்திருந்தது. அதேபோல் துல்கர் சல்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் இப்படத்திற்கான இரண்டாவது பாடலின் லிரிக்ஸ் வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார். மேலும் “இறுதியாக எங்கள் சீதா உங்களை மயக்க வந்துள்ளார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.