வேலையை விட்டு ஓடி வந்த மனோஜ்க்கு ஷாக் மேல் ஷாக் கொடுத்துள்ளார் முத்து.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி தன்னுடைய தோழியிடம் பேசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவர் கிருஷ்ணா பற்றி ஞாபகப்படுத்த அப்செட்டாகி எழுந்து வெளியே வருகிறார்.

அதற்கு அடுத்ததாக மனோஜ் ஒரு இடத்தில் வேலைக்கு சென்றுள்ள நிலையில் அவருடைய உயர் அதிகாரியான பெண்மணி அவருக்கு சில instructions கொடுத்து கொண்டிருக்கும் போது ரோகிணி ஆபீசுக்கு வரேன் அந்த பெண்மணி மனோஜை அனுப்பி ரோகிணியை உள்ளே கூட்டி வர சொல்லி ஒரு பக்கம் மசாஜ் செய்து கொண்டே இன்னொரு பக்கம் மனோஜிடம் பேச இதனால் கடுப்பாகும் மனோஜ் இந்த வேலையே வேண்டாம் என தூக்கி போட்டு விட்டு வெளியே வருகிறான்.

அதற்கு அடுத்ததாக ரோகினி அவனிடம் சாரி கேட்க நீங்க என்ன பண்ணுவீங்க எல்லாம் அந்த பொம்பளைக்கு இருக்க பண திமிரு என்கிட்ட பணம் இல்ல அதனால இப்படி இவங்க கிட்ட எல்லாம் வேலை செய்ய வேண்டியது இருக்கு என புலம்பி விட்டு வெளியே வருகிறார்.

வீட்டுக்கு வந்த மனோஜ் விஜயாவிடம் வேலையை விட்டு விட்டு வந்ததாக சொல்ல விஜய்யா என் மேல சத்தியம் பண்ணிட்டு இப்படி வேலைக்கு போகாமல் இருந்தால் எப்படி என புலம்ப அதெல்லாம் பாத்துக்கலாம்மா என கூறுகிறார். இந்த நேரத்தில் மீனா வந்து அத்தை உங்களுக்கு காபி வேணுமா என கேட்க மனோஜ்க்கும் சேர்த்துக் கொண்டு வா என்று சொல்ல உள்ளே போன மீனா விஜயாவுக்கு மட்டும் காபி கொண்டு வந்து கொடுக்க மனோஜுக்கு எங்கே என கேட்க அவருக்கெல்லாம் என்னால தர முடியாது என பதிலடி கொடுக்கிறார்.

விஜயா அவனுக்கு நீ காபி கொடுத்து தான் ஆக வேண்டும் என அடம் பிடிக்க மீனா முடியாது என சொல்ல விஜயா தனக்கு எடுத்து வந்த காபியை எடுத்து மனோஜிடம் கொடுத்து இப்ப என்ன பண்ணுவ என கேட்க அப்போது அங்கு வரும் முத்து காபியை பிடுங்கி அவனுக்கு வேணும்னா அவனை போட்டு குடிக்க சொல்லுங்க இல்லன்னா நீங்க உங்க பிள்ளைக்கு போட்டு கொடுங்க என சொல்கிறார்.

இப்போ அவன் அடகு கடையில் வைத்த நகை மாதிரி பணத்தை திருப்பி கொடுக்கவா இருக்கும் அவன் என்னுடைய ப்ராப்பர்ட்டி நான் என்ன சொல்றேன்னு அதை தான் கேட்கணும் என ஷாக் கொடுக்கிறார்.

பிறகு முத்துவை உட்கார வைத்து உன்னை ஏமாத்திட்டு போன பொண்ணு போட்டோ இருக்கா உன்ன இப்படி சுத்த விட்டுட்டு போன அவங்கள நான் பாக்கணும் என சொல்ல அதெல்லாம் இல்ல டெலிட் பண்ணிட்டேன் என மனோஜ் சொல்கிறார். உடனே விஜயா இப்ப எதுக்கு அந்த கதை எல்லாம்? அடுத்தவன் பணத்தை தூக்கிட்டு போனவ நல்லாவே இருக்க மாட்ட என சொல்ல முத்து அப்படின்னா அந்த சாபம் எல்லாம் உங்க புள்ளைய தான் சேரும் என முதலில் பணத்தை திருடி கிட்டு போனது அவன் தான் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை என பாட்டு பாடி மனோஜை வெறுப்பேத்தி சொன்ன டைமுக்குள்ள பணம் வந்தாகணும் என சொல்ல விஜயா அதெல்லாம் அவன் பணம் கொடுத்துடுவான் என்று சொல்ல அதான் வேலை போயிடுச்சு அப்புறம் எப்படி பணம் கொடுப்பான் என முத்து ஷாக் கொடுக்கிறார்.

மீனா இவனுக்காக எந்த வேலையும் நீ செய்யாத அப்படியே செய்ய சொன்னா நீ யோசிக்கவே யோசிக்காத விஷத்தை வச்சுடு என சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் இவனுக்கு வேலை போயிடுச்சுன்னு முதல்ல பயப்பட வேண்டியது நீங்கதான் ஏன்னா உங்க மேல தான் அவன் சத்தியம் பண்ணி இருக்கான். எனக்கு என்னமோ இவனாலத்தான் உங்களுக்கு ஏதோ ஆகப் போகுதுன்னு தோணுது என சொல்ல விஜயா பயப்படுகிறார்.

முத்து மனோஜை வெறுப்பேத்திய விஷயங்களைப் பார்த்து மீனா சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.