மனோஜை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வர இந்த விஷயம் தெரிந்த முத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Sirakadikka Aasai Episode Update 10.05.23‌ : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் முத்து மீனா நகை எங்கே என கேட்டு நச்சரித்தது நினைத்து நண்பர்களிடம் புலம்பி கொண்டிருக்க அவர்கள் மாமியார் வீட்டு நகையில் கையை வச்சா இப்படித்தான் தலையை பிச்சிக்கிட்டு இருக்கணும் என அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சமயத்தில் அண்ணாமலை அங்கு வர நீ எதுக்கு பா வந்த நானே வீட்டுக்கு தானே வரப்போறேன் என சொல்ல வீட்ல வைத்து பேச முடியாது அதனால தான் இங்க வந்தேன் என சொல்கிறார். மேலும் மீனாவை எதுக்கு கஷ்டப்படுத்துற அவளோடு சேர்ந்து நல்லபடியா வாழற வழியை பாரு என அறிவுரை சொல்ல முத்து நான் என்ன கஷ்டப்படுத்துற அவதான் ஒரு மனுஷன் குடிக்கிறாரே அவர் எப்படி தனியாக வருவார் என்ற பொறுப்பு இல்லாம என்ன விட்டுட்டு கிளம்பி வந்துட்டா என சொல்ல அண்ணாமலை நீ அறிவோட தான் பேசுறியா இல்ல அறிவு இல்லாத மாதிரி நடிச்சுகிட்டு பேசுறியா என கேள்வி கேட்கிறார்.

அதன் பிறகு முத்துக்கு ஒரு சவாரி வர அவர் கிளம்புவதாக சொல்ல அண்ணாமலை சரி மதியம் வீட்டுக்கு வந்துடு உங்க அம்மா ஏதோ ஏற்பாடு பண்ணி இருக்கா என சொல்ல முத்து விஷயம் என்ன என கேட்க நீ வீட்டுக்கு வா நான் சொல்றேன் என சொல்லி கிளம்புகிறார்.

அதற்கு அடுத்ததாக முத்துவும் வீட்டுக்கு வந்து விட பார்வதி மற்றும் விஜயா என இருவரும் சமைப்பதற்கு வீட்டில் அலங்காரத்திற்கும் தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். அதன் பிறகு அண்ணாமலை மனோஜை மாப்பிள்ளை பார்க்க வரும் விஷயத்தை சொல்ல முத்து இவனுக்கு எதுக்கு இப்ப கல்யாணம் இவனை வெட்டியா தண்டசோறு தின்னுகிட்டு இருக்கான் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எடுத்து வைக்க சொல்லுங்க என சத்தம் போடுகிறார்.

இதையெல்லாம் பார்வதி ஒட்டு கேட்டு விஜயாவிடம் சொல்ல விஜயா இந்த கல்யாணம் மட்டும் நடக்கட்டும் அவ முகத்துல 27 லட்சத்தை தூக்கி வீசறேன் என சொல்கிறார். அதன் பிறகு அண்ணாமலை ஒரு வழியாக முத்துவை சமாதானம் செய்கிறார்.

பிறகு விஜயா ஏதாவது வேலை செய்றீங்களா எல்லாவற்றையும் நானே செய்யணுமா இவன் சும்மாதான் இருக்கான் என சொல்ல முத்து நான் என் வேலையை விட்டுட்டு வந்து இருக்கேன் என சத்தம் போடுகிறார். இதனால் விஜயா யாரும் எதுவும் செய்ய வேண்டாம் என் புள்ளைக்கு எல்லாத்தையும் நானே பண்ணிக்கிறேன் என சொல்லி எல்லா வேலையும் செய்கிறார்.

அதன் பிறகு ரூமுக்குச் சென்று மனோஜை சமாதானம் செய்து அவனுக்கு ஏற்றபடி சட்டை எடுத்துக் கொடுத்து தலைவாரி மேக்கப் செய்துவிட இதை பார்த்த முத்து விட்டா பூவெல்லாம் வெச்சு விடுவாங்க போல என நக்கல் அடிக்கிறார். அதன் பிறகு முத்து வெளியே வர விஜயா பின்னாடியே வந்து அவனுக்கு கையை தூக்கு என சொல்லி சென்ட் அடித்து விட முத்து வடிவேலு காமெடி தான் ஞாபகம் வருது என சொல்லி நக்கல் அடித்து வெறுப்பேற்றுகிறார்.

இன்னொரு பக்கம் பார்வதி கேட்டுக் கொண்டதற்காக மீனா பஜ்ஜி போண்டா என எல்லாத்தையும் ரெடி பண்ணி வைக்கிறார். மனோஜ் வெளியே வந்து ஹாலில் உட்கார வர முத்து அவனது அடிபட்ட காலில் மிதித்து நீ இப்போ வெளிய எல்லாம் வரக்கூடாது பொண்ணு வீட்டார் வந்ததும் கையில காபி கொடுப்பாங்க அதை எடுத்துட்டு வந்து தான் கொடுக்கணும் என சொல்லி கிண்டல் அடிக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.