ஊருக்குச் சென்ற பாட்டி, ஆட்டத்தை ஆரம்பித்த விஜயா, கடுப்பான ரோகிணி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
பாட்டி ஊருக்கு போக, விஜயா ரோகினிக்கு பனிஷ்மென்ட் கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஹாலில் வட்டமாக சேர் போட்டு இருக்க மீனா முத்துவுக்கு சாப்பாடு வைக்கிறார் பாட்டி சொன்னது கூட நல்லா இருக்கு எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிட்டா சூப்பரா இருக்கும்ல என்று சொல்லிக் கொண்டிருக்க விஜயா வந்து சாப்பிட உட்காருகிறார் மீனா அவருக்கு பூரி வைத்துவிட சாப்பிடும் நேரத்தில் முத்து “ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தை என்ன”என்ற பாடலை பாடி விஜயாவை வெறுப்பேற்ற கொஞ்ச நேரத்தில் அண்ணாமலை வருகிறார். அவருடைய பங்குக்கு அவரும் எல்லாரையும் ஒண்ணா நினைக்கணும் என்று சொல்ல, ஸ்ருதி வந்து ரோகிணி தான் உங்களோட ஃபேவரைட் மருமகனு சொல்லுவீங்க இப்ப அந்த இடத்துக்கு யார் வருவாங்க என்று கிண்டல் பண்ணிவிட்டு உட்காருகிறார்.
ரவியும் அண்ணியை இத வச்சி எவ்வளவு நாள் வேலை வாங்கியிருப்பீங்க கேவலமா பேசி இருப்பீங்க என்று சொல்லி இதுக்கு அப்புறமாவது அண்ணிய இது மாதிரி பண்ணாதீங்க என்று சொல்லி உட்காருகிறார், உடனே பாட்டி வந்து காசு பணம் முக்கியம் இல்ல விஜயா சந்தோஷம்தான் முக்கியம் மூணு மருமகளையும் ஒன்னா பாரு என்று சொல்ல மீனா நான் கைபட்ட குத்தோ கால் பட்டா குத்தோன்னு சொல்லுவீங்க நானாவது கௌரவமா பூ விக்கிற மத்தவங்கள மாதிரி பொய் சொல்லி ஏமாத்தல என்று விஜயாவை பார்த்து கேள்வி கேட்கிறார். உடனே கோபப்பட்ட விஜயா போதும் என கத்த மீனா உங்களுக்கு ஒன்னும் பூரிய வைக்கல அதுக்குள்ள போதும்னு சொல்றீங்க என்று சொல்ல அண்ணாமலை பகல் கனவா என்று கேட்கிறார். பிறகுதான் அனைத்தும் கனவு என தெரிய வருகிறது. அனைவரும் உட்கார்ந்து ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருக்க பாட்டி ஊருக்கு கிளம்புவதாக சொல்லுகிறார்.
கொஞ்ச நாள் இருந்து போங்க பாட்டி என்று முத்து சொல்ல அங்க வேலையே நடக்காது என்று சொல்லிவிட்டு சாப்பிட்டு முடித்தவுடன் பாட்டி பூஜை செய்து எல்லாருக்கும் விபூதி வைத்துவிட்டு இந்த வீட்ல குழந்தை பிறந்தால் தான் பிரச்சனை இருக்காது முதல்ல எல்லாரும் குழந்தை பெற்றுக்கொள்கிற வழியை பாருங்க அந்த தொட்டிலுக்கு வேலையே இல்லாம போயிடும் போல இருக்கு என்று சொல்லி அட்வைஸ் பண்ணுகிறார். முதலில் விஜயாவிடம் மூணு மருமகளையும் ஒன்னா பாரு என்று சொல்லிவிட்டு மனோஜிடம் பொறுப்பாக இருக்குமாறு ரோகிணி இடம் பொய் சொல்லாமல் உண்மையாக இருக்குமாறு சொல்லுகிறார்.
ஸ்ருதி மற்றும் ரவியிடம் சண்டை போட்டாலும் சந்தோஷமா வாழனும் என்று சொல்லிவிட்டு மீனா கிட்ட எனக்கு எதுவும் சொல்ல வேண்டியது இல்ல அவளே எல்லாம் பார்த்துப்பா ஒரு குழந்தை பிறந்த ஆகணும் அதுக்கு மீனாதான் பொறுப்பு என்று சொல்லிவிட்டு பாட்டி கிளம்பி விடுகிறார். விஜயா ரோகினி பார்த்து முறைக்க ரூமுக்கு சென்று விடுகிறார் உடனே மனோஜ் பின்னாலே போக விஜயா முறைத்தவுடன் ஹாலில் உட்கார்ந்து விடுகிறார்.
மறுநாள் மனோஜ் வேலைக்கு போக ரெடியாகி கொண்டிருக்க ரோகிணி ரூமில் அமைதியாக நின்று கொண்டிருக்கிறார் மனோஜ் எதுவும் பேசாமல் வெளியில் வந்து விஜயாவிடம் சொல்லிவிட்டு போக மனோஜை நிற்க சொல்லி இதுக்கு மேல அவ ஷோரூம் வரக்கூடாது நீ மட்டும் தான் போகணும் அவ கிட்ட பேசக்கூடாது என்று சொல்லி விடுகிறார் அது அவளை கூப்பிட்டு சொல்லிட்டு போ என்று சொல்ல ரோகினியை கூப்பிட்டு இனிமேல் ஷோரூம் வர வேண்டாம் என்று சொல்ல ஏன் என கேட்கிறார் உடனே விஜயா முறைத்துக் கொண்டு ஏன் உனக்கு தெரியாதா ஒண்ணுமே தெரியாத பாப்பாவா நீ என்றெல்லாம் பேசி கோபப்படுத்தி மனோஜ் அனுப்பிவிட்டு இனிமே அவன் வேலை அவன் பார்த்துக்க தெரியும் என்று சொல்லிவிடுகிறார். இதனால் கடுப்பாண ரோகிணி ரூமுக்குச் செல்ல ரோகிணியின் அம்மா போன் பண்ணுகிறார். ரோகிணி அம்மா என்ன சொல்லுகிறார்? அதற்கு ரோகிணியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
