காதலரை அறிமுகப்படுத்திய சிந்து பைரவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்..!

காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார் சிந்து பைரவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்.

Sindhu Bhairavi serial actress Aarti Subhash introduced her lover

Sindhu Bhairavi serial actress Aarti Subhash introduced her lover

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் பிரபலமானவர் ஆர்த்தி சுபாஷ். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் முடிவுக்கு வந்த வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிந்து பைரவி சீரியலில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது காதலருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உள்ளார். அவர் வேறு யாருமில்லை சன் டிவியில் மிஸ்டர் மனைவி சீரியலில் நாயகனான பவன் ரவீந்தரா தான் என தெரியவந்துள்ளது.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து லைக்ஸ்களை குவித்து வருகின்றன.