அருண் விஜயின் சினம் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் ஜி என் ஆர் குமரவேலன் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் சினம். இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார்.

அருண் விஜய்க்கு வெற்றியை கொடுக்குமா சினம்?? சினம் படத்தின் முழு விமர்சனம் இதோ.!!

ஷபீர் இசையமைக்க கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

போலீஸ் அதிகாரியாக இருக்கும் அருண் விஜய் லால்வாணியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு அவரது மனைவி அப்பா வீட்டிற்கு சென்று திரும்பி வரும் போது மர்ம நபர்களால் அவர் கொல்லப்படுகிறார். அவருடன் சேர்த்து இன்னொருவரும் கொல்லப்பட இதனால் உடைந்து போகும் அருண் விஜய் தனது மனைவியின் கொலைக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். அதற்கான விசாரணையை நடத்த அதன் மூலம் அவருக்கு தெரியவந்தது என்ன? கொலையாளியை கண்டுபிடித்தாரா இல்லையா என்பது தான் இந்த பாடத்தின் கதைக்களம்.

படத்தைப் பற்றிய அலசல் :

அருண் விஜய் வழக்கம் போல மிரட்டலான நடிப்பை கொடுத்து படத்தை தாங்கிப் பிடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக அவரது கெட்டப்பும் நடிப்பும் கனகச்சிதமாக பொருந்தி உள்ளது. எமோஷனல் காட்சிகளில் நம்மை உருக வைக்கிறார்.

நாயகி கொஞ்ச நேரம் மட்டுமே படத்தில் வந்தாலும் அழகான நடிப்பை கொடுத்துள்ளார். படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்கள் அவர்களுக்கான வேலையை அழகாக செய்து கொடுத்துள்ளனர். சபீரின் இசை மற்றும் கோபிநாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

அருண் விஜய்க்கு வெற்றியை கொடுக்குமா சினம்?? சினம் படத்தின் முழு விமர்சனம் இதோ.!!

இயக்குனர் கொஞ்சம் பழைய கதையை கையில் எடுத்தாலும் அதை அழகாகவும் நேர்த்தியாகவும் கொண்டு சென்றுள்ளார்.