YouTube video

Simbu Pays Last Respect to Producer V.Swaminathan

சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் இந்த வைரஸ் தாக்குதல் 83 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டரை லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பது சோகத்தை கொடுக்கும் ஒன்றாகவே இருக்கிறது.

சமீபத்தில் லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் வி சுவாமிநாதன் இந்தக் கரோனா வைரஸ்க்கு சிகிச்சை பலனின்றி பலியானார். இவருடைய மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் இவரது தயாரிப்பில் சிலம்பாட்டம் படத்தில் நடித்த சிம்புவும் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தயாரிப்பாளர் ஸ்வாமிநாதன் எனக்கு மிகவும் நெருக்கமானவர் நல்லவர், புத்திசாலி.எந்த நேரத்தில் யாரை வைத்து என்ன படம் எடுக்கவண்டும் என்பதை நன்கு தெரிந்தவர். நட்புக்கு இலக்கணமானவர். சிலம்பாட்டக் கதைக்களத்தில் என்னை பத்திரமாக பார்த்துக் கொண்டார்.

இலங்கையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்தபோது எனக்கு என்ன தேவை என்பதை அறிந்து ஒரு சகோதரனாய் போல படப்பிடிப்புகளை நடத்தினார். அவரைப்பற்றி நிறைய நினைவலைகள் உள்ளன. இப்படி சில நாட்களில் விட்டுப் பிரிவார் என தெரியாது.

மருத்துவமனை சென்று பார்த்து ஆறுதல் கூற கூட முடியாத நோயால் அவதிப்பட்டு உயிரிழந்தது வேதனைக்குரியது.அவருடைய மகன்களான அஸ்வின் மற்றும் அசோக் ஆகியோருக்கு என்றும் உறுதுணையாக இருப்போம். குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு அமைதியான மனிதனை இழந்ததில் வருத்தம் அடைகிறேன்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சுற்றத்திற்கும், திரையுலகினருக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். மரணம் அடைந்தவரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும் என வேண்டிக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.