நடிகர் சிம்பு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

Simbu Join With Nelson : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

விட்டதை கையிலெடுக்கும் சிம்பு.. அடுத்து சிம்புவை இயக்கப் போவது யார் தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்

இந்தப் படத்தை தொடர்ந்து கொரானா குமார் படத்தில் நடிக்கிறார். மேலும் சிம்புவின் 50வது படத்தை அஸ்வந்த் மாரிமுத்து இயக்குகிறார். இந்த படங்களை தொடர்ந்து நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் உருவாக இருந்து பாதியில் கைவிடப்பட்ட வேட்டை மன்னன் படத்தை மீண்டும் எடுக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

விட்டதை கையிலெடுக்கும் சிம்பு.. அடுத்து சிம்புவை இயக்கப் போவது யார் தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்

இதனால் வெகு விரைவில் சிம்பு மற்றும் நெல்சன் கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.