Simbu in Kettavan
Simbu in Kettavan

Simbu in Kettavan – இது நாள் வரை சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அவர் திரும்பிய பக்கமெல்லாம் சர்ச்சைகள் வெடித்தாலும் அவரை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் கோரஸாக சொல்லும் ஒரு விஷயம், “சிம்பு ஒரு அபாரமான நடிகர்.. அவர் மட்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினால்.. நிச்சயம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவார்” என்பதுதான்.

இதுநாள்வரை இதை கண்டும் காணாமலும் வந்த சிம்பு, தற்போது இதற்கு செவிசாய்த்திருப்பது போல் தெரிகிறது.

இனி ரசிகர்களுக்காக நல்ல படங்கள் கொடுப்பேன் என சிம்பு உறுதியளித்துள்ளார்.

அதன்படி அடுத்ததாக மாநாடு படத்தில் நடிக்கும் சிம்பு அதைதொடர்ந்து கன்னடத்தில் வெற்றிபெற்ற முஃப்டி படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இப்படத்தில் இவருடன் கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார்.

போலீஸ் திருடன் கதையை மையப்படுத்திய இப்படத்தில் கௌதம் கார்த்திக் போலீஸாகவும் சிம்பு திருடனாகவும் நடிக்கின்றனர்.

ஏற்கனவே சிம்புவுக்கு நெகடிவ் இமேஜ் இருக்கும் நிலையில் அவர் மறுபடியும் ஏன் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறார் என ரசிகர்கள் வருந்துகின்றனர்.

எனினும் இது விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி போன்ற கதாபாத்திரம் என்பதால் ரசிகர்களை கவரும் என கூறப்படுகிறது.

கன்னடத்தில் இப்படத்தை இயக்கிய நாரதனே தமிழிலும் இப்படத்தை இயக்குகிறார்.