சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் முழு விமர்சனத்தையும் பார்க்கலாம் வாங்க.

Sila Nerangalil Sila Manithargal Review : தமிழ் சினிமாவில் விஷால் வெங்கட் இயக்கத்தில் நாசர், அசோக் செல்வன், ரேயா, அபிஹாசன், மணிகண்டன், ரித்விகா, பானுப்பிரியா, அஞ்சு குரியன், பிரவீன் பாலா, கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சில நேரங்களில் சில மனிதர்கள்.

படத்தின் கதைக்களம் :

படத்தில் ஒரு விபத்து நடக்கிறது. இந்த விபத்தின் மூலம் நான் தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையில் எப்படி பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்பதை சொல்வதுதான் இந்தப் படத்தின் கதைக்களம்.

நான்கு மனிதர்களின் வாழ்க்கை எப்படி ஒரு புள்ளியில் இணைகிறது என்பதை படம் விளக்குகிறது.

படத்தை பற்றிய அலசல் :

நாசர் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய கதாபாத்திரம் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

அசோக் செல்வன் அவருக்கே உரித்தான பாணியில் அழகான நடிப்பை கொடுத்துள்ளார்.

மணிகண்டன் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி அதிர வைக்கிறார். எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை திறம்பட நடிக்க முடியும் என்பதை இந்தப் படத்தின் மூலம் அவர் உறுதி செய்துள்ளார். படத்தில் நடித்து இருப்பது மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு வசனங்களையும் எழுதியுள்ளார். அவருடைய நடிப்பு மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளது.

மற்றபடி படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் நடிகைகள் என அனைவருமே அவர்களின் நடிப்பை திறம்பட வெளிப்படுத்தியுள்ளனர்.

அபி ஹாசன் நடித்த ஒரு படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பல படங்களில் நடித்தவர் போல தலைகணமாக பேசுவது சர்ச்சையை ஏற்படுத்துகிறது. இவருடைய இந்த கதாபாத்திரம் சமீபத்தில் மேடைப் பேச்சால் பெரும் சர்ச்சைக்குள்ளான ஒரு நடிகரை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

இசை :

ரதனின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் சுமார் ரகம்.

ஒளிப்பதிவு :

திறமையான ஒளிப்பதிவு மூலம் ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன்.

எடிட்டிங் :

பிரசன்னா ஜிகே அவர்களின் எடிட்டிங் கனகச்சிதம்.

இயக்கம் :

விஷால் வெங்கட் அவர்கள் படத்தை சிறப்பாக கொண்டு சென்றுள்ளார். மணிகண்டன், நாசர் உள்ளிட்டோரின் கதாபாத்திரம் நம்மை கவரும் வகையில் உள்ளது. திரைக்கதையில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.