பிரபல நடிகையுடன் காதலில் இருந்து வருகிறார் நடிகர் சித்தார்த்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் ஒருவராக வலம் ஒருபவர் சித்தார்த். பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நடிகை சமந்தாவும் இவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென பிரேக் அப் ஆனது.

இதனையடுத்து நடிகை சமந்தா நடிகர் நாக சைதான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது நடிகர் சித்தார்த் பிரபல நடிகை அதிதி ராவை காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இருவரும் ஒன்றாக சேர்ந்து பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் இவர்கள் குறித்து பரவும் காதல் கிசுகிசுக்களுக்கு இதுவரை இருவரும் மறுப்பு தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இருவரும் ஒரே காரில் வந்து இறங்கி ஒன்றாக அமர்ந்து நிகழ்ச்சியை கண்டு களித்தனர். இதன் காரணமாக இவர்கள் இருவரும் காதலித்து வருவது உண்மைதான் என ரசிகர்கள் உறுதியாக கூறி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் விரைவில் காதல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.