நவரசா படத்தில் நடித்தது குறித்த அனுபவங்களை ஷேர் செய்துள்ளனர் நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை ரித்விகா.

Sidharth About Navarasa : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான மணிரத்னம் அவர்களின் தயாரிப்பிலும் 9 இயக்குநர்கள் இணைந்து ஒன்பது பகுதிகளாக இயற்றியுள்ள அந்தலாஜிக்கல் திரைப்படம் தான் நவரசா.

இந்த படத்தில் நடிகர் சூர்யா சித்தார்த் அரவிந்த் சாமி, ரித்விகா என பலர் இணைந்து நடித்துள்ளனர். நேரடியாக இந்த திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் வெளியாக உள்ளது.

13 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னையில் ஓர் மழைக்காலம்

இன்மை உங்களை ஆச்சரியப்படுத்தும், அரவிந்த சாமியுடன் பணிபுரிந்தது சிறந்த அனுபவம் - நவரசா குறித்து பேசிய சித்தார்த் மற்றும் ரித்விகா.!!

இந்த நிலையில் தற்போது அரவிந்த சாமியுடன் ரௌத்திரம் என்ற பகுதியில் இணைந்து பணிபுரிந்தது குறித்து ரித்விகா பேசியுள்ளார். அரவிந்த் சுவாமியுடன் இணைந்து பணிபுரிந்த, தனது அனுபவத்தைப் பற்றி ரித்விகா கூறியதாவது… அரவிந்த் சுவாமி போன்ற புகழ்பெற்ற நடிகருடன் பணிபுரிவது, என் வாழ்வில் மிகபெருமையயான தருணம். ஒரு நடிகராக இல்லாமல் இயக்குநராக அவரை அருகில் இருந்து பார்த்தது, மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு காட்சியை உருவாக்குவதில் அனைத்து தொழில் நுட்ப சாத்தியங்களையும் பயன் படுத்துவதில், தேர்ந்தவராக இருந்தார். சினிமா குறித்த அவரது நுணுக்கமான அறிவும் அதை உருவாக்கத்தில் அவர் பயன்படுத்திய முறையும் அபாரமானது. இப்படத்திற்காக காட்சிகள் மற்றும் வசனங்களை ஒத்திகை செய்யும் ஆன்லைன் கூட்டங்களில் கலந்துகொண்டது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது என்றார்.

அதே போல் நடிகர் சித்தார்த் இன்மை பகுதி குறித்து நடிகர் சித்தார்த் கூறியதாவது…

மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திரா அவர்கள் எனக்கு ‘இன்மை ’ வாய்ப்பை வழங்கியபோது நான் மிக மிக மகிழ்ச்சியடைந்தேன். நவரசங்களில் ஒரு உணர்வை குறிக்கும் இன்மை என்பதின் அர்த்தம், பற்றாக்குறை அல்லது ஏதும் இல்லாதது என்பதாகும். இன்மை என்ற வார்த்தையைக் கேட்கும்போதே மக்களின் ஆர்வம் அதிகரிக்கும். COVID ஆல் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள, திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் ஒரு முன்னெடுப்பாக, இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் மற்றும் நடிகை பார்வதி திருவோத்து ஆகிய திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு அற்புதமான அனுபவம் என்றார்.

இந்த வெப் சீரிஸ் தொடர் ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இனிமேல் சிம்பு பட அப்டேட்டை கேட்காதீங்க? – கடுப்பான Maanaadu தயாரிப்பாளர்! |