மலேசியா ட்ரிப்பில் சிபிராஜை ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல வாரிசு நடிகராக வலம் வருபவர் சிபி சத்யராஜ். இவரது நடிப்பில் வெளியான கபடதாரி, நாய்கள் ஜாக்கிரதை, மாயோன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றன.

மலேசியா ட்ரிப்பில் சிபிராஜை சூழ்ந்த கூட்டம்.. நடந்த சுவாரசியமான சம்பவம் - வைரலாகும் நண்பரின் பதிவு.!!

மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய நண்பருடன் மலேசியா சென்றுள்ளார். அங்கே சிபி சத்யராஜ் சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் கூட்டத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து பதிவு செய்துள்ளார்.

இது குறித்த அவரது முகநூல் பதிவில் கடந்த வாரம் (9/8/22 – 15/8/22) எனது இனிய நண்பர் சிபி மலேசியாவில் இருந்தபோது உள்ளத்தை உல்லாசமாகிய தருணங்கள்.

தமிழ்த் திரைப்பட நடிகராக இருப்பதால், ஹீரோவின் முகத்தை உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தமிழர்கள் அடையாளம் கண்டுகொள்வது சகஜம். வழக்கம் போல் பெரும்பாலான நடிகர்கள் எதிர்கொள்ளும் “அன்பு தொல்லை” இங்கேயும் நடந்தது. சிபியின் முகத்தை அடையாளம் கண்டுகொண்ட பல தமிழர்கள் அவருடன் படம் எடுத்துக் கொண்டனர்.

மலேசியா ட்ரிப்பில் சிபிராஜை சூழ்ந்த கூட்டம்.. நடந்த சுவாரசியமான சம்பவம் - வைரலாகும் நண்பரின் பதிவு.!!

ஆனால் எதிர்பாராத ஒரு இனிமையான சம்பவம் நடந்துள்ளது…மலாய்க்காரர்கள் அதிகம் இருந்த ஒரு இடத்தில் நானும் சிபியும் இருந்தபோது…. நாய்கள் ஜாக்கிரதை, கபடதாரி ஆகிய படங்களை OTT நெட்வொர்க் மூலம் பார்த்த சில மலாய்க்காரர்கள் என்னுடன் நடந்து வந்த 6 அடி உயரமுள்ளவரின் முகத்தை அடையாளம் கண்டு கொண்டார்கள்.

அந்தப் பகுதியில், வெவேறு இடத்தில அவருடன் மொத்தம் ஐந்து மலாய்க்காரர்கள் புகைப்படம் எடுத்தனர். உண்மையாக சொல்லப்போனால், மலேசிய மண்ணில் மற்ற இனத்தைச் சேர்ந்த ரசிகர்கள் எனது நண்பரை அடையாளம் காணும்போது சிபியை விட என் மகிழ்ச்சி மேலானது.

என்னை அலைக்கழித்த சந்தோஷ அலையில் அந்த நான்கு பேரையும் போனில் படம் எடுக்க எனக்கு சிந்தனை வரவில்லை. இருப்பினும், சிபியுடன் படம் எடுத்த ஐந்தாவது நபரை எனது தொலைபேசியில் கிளிக் செய்து அவரிடம் சில கேள்விகளைக் கேட்டேன். அந்த மலாய் பெண்ணின் பெயர் ஜரீனா. சிறுவயதில் இருந்தே தமிழ் சினிமாவின் பிரியர். விஜய் மற்றும் சூர்யாவின் தீவிர ரசிகை. சிபியையும் பிடிக்கும் என்று சொன்னார். என் நண்பர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களைப் பார்த்திருக்கிறார். நாய்கள் ஜாக்கிரதை மற்றும் கபடதாரி ஆகியவை அவருக்குப் பிடித்தவை.

எங்களை அளவற்ற மகிழ்ச்சிக்குள் தள்ளி அழகு பார்த்த தருணம்…”சிறுவயதில் இருந்தே உங்கள் அப்பாவின் படங்கள் பிடிக்கும்” என்று ஜரீனா சொன்னபோது. அந்த வார்த்தைகளைக் கேட்டு எங்கள் இருவருக்கும் ஒரே ஆச்சரியம். “இது நம்ம ஆளு” என்று என் மனம் கிசுகிசுத்தது. நம்ம புரட்சித் தமிழனை அவர் அடையாளம் கண்டுகொண்டபோது எனக்குள் ஒரு பேரின்பம். ஒரு ரசிகனாகிய எனக்கே அத்தகைய உணர்வு இருந்தால், என்னுடன் நிற்கும் அவர் வாரிசின் உணர்வை கற்பனை செய்து பாருங்கள். நான் நேரில் பார்த்தேன்….சிபியின் பொலிவான முகத்தில் முத்துப் பற்கள் தெரிய புன்னகை மலர்ந்தது.

சிபியின் கலைப் பயணம் சிறக்க ஜரீனா வாழ்த்தினார். மலேசியர்கள் காட்டிய அன்பில் சிபி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். புறப்படுவதற்கு முன், ஜரீனா தனது தொலைபேசி எண்ணைக் கொடுத்தார். மலேசியாவிற்கு சிபி அல்லது சத்யராஜ் Uncle வந்தால் என்னை தொடர்பு கொள்ளுமாறு கூறினார். புரட்சித் தமிழனையும் சந்திக்க மிகவும் விரும்பினார். எதிர்காலத்தில் சத்யராஜ் Uncle மலேசியா வரும்போது அவரது கனவுகளுக்கு வண்ணம் தீட்டுவேன் என உறுதியளித்துள்ளேன்.இனிய நண்பர் சிபியின் வருகையால், எனது புதிய நட்பு வலையமைப்பு அதிகரித்துள்ளது.

நண்பன் உருவாக்கினான் நட்பு அதுவே உறவுகளில் மிகச் சிறப்பு என பதிவிட்டுள்ளார்.