தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன். அப்பாவை போலவே பாடகி, டான்ஸர் என பன்முக திறமையுடன் வலம் வருபவர்.

இதுவரை பாடகியாக மட்டுமே இருந்து வந்த ஸ்ருதி ஹாசன் தற்போது பாடல் ஆசியரியையாகவும் புது அவதாரம் எடுத்துள்ளார். அதனை லண்டனில் உள்ள Uber Trendy NED ஹோட்டலில் அரங்கேற்றியுள்ளார்.

சுமார் 45 நிமிடங்கள் நடந்த இந்த நிகழ்ச்சியை பவர் ஸ்டூடியோ நிறுவனம் ஏற்பாடு செய்ய பென்னி டி நடத்தியிருந்தார். பாய் ஜார்ஜ், கைலி மினோஹ், லில்லி ஆலன், ரோபி வில்லியம்ஸ் மற்றும் பலர் உடனினிருந்து ஸ்ருதிஹாசனினின் புதிய முயற்சியை பாராட்டி இருந்தனர்.