ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் இணைத்து மழையிலாடும் க்யூட்டான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் இதனைப் பார்த்து ரசிகர்கள் அந்த வீடியோவிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக ஜொலித்திருந்தவர் ஸ்ரேயா சரண். இவர் தமிழில் “எனக்கு 20 உனக்கு 18” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இவர் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது ரஜினியின் “சிவாஜி”என்னும் படத்தின் மூலம்தான். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து ஒரு அழகான நடிப்பினை கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நிறைய மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

க்யூட்டான வீடியோவை வெளியிட்டு இருக்கும் ஸ்ரேயா சரண் - லைக்ஸ்களை குவித்து வரும் ரசிகர்கள்.

இதனிடையே ஆண்ட்ரி கொஸ்சீவ் என்பவரை நீண்ட நாள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ராதா என்னும் பெண் குழந்தை உண்டு. அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகிய ஸ்ரேயா சரண் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோக்களை மகிழ்ச்சியுடன் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.

க்யூட்டான வீடியோவை வெளியிட்டு இருக்கும் ஸ்ரேயா சரண் - லைக்ஸ்களை குவித்து வரும் ரசிகர்கள்.

அதேபோல் தற்போது தனது மகள் ராதாவுடன் இணைந்து மழையில் நனைந்து கொண்டு நடனமாடும் கியூட்டான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்து உள்ள ரசிகர்கள் பல லைக்ஸ்களை குவித்து உள்ளனர். மேலும் இதனை வைரலாக்கியம் வருகின்றனர்.