நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று பிரியங்கா அருள் மோகன் தெரிவித்திருந்த செய்தியாள் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த். இவர் அண்ணாத்த படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் தனது 169 வது படத்தை நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரவபூர்வமான தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஜெய்லர் திரைப்படத்தின் புதிய தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!!.

இதனைத் தொடர்ந்து மேலும் சில நட்சத்திரங்களாக பருத்திவீரன் சரவணன், யூடியூப் சிறுவன் ரித்து, நடிகர் ஜெய் ஆகியோரும் இப்படத்தில் இணைந்துள்ளதாக புதிய தகவல்களும் அவ்வப்போது வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிப்பதாகவும் தகவல்கள் இப்படத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இது குறித்து நடிகை பிரியங்கா அருள் மோகன் ஷாக்கிங் ஆன தகவலை கொடுத்துள்ளார்.

ஜெய்லர் திரைப்படத்தின் புதிய தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!!.

அதில் அவர், ஜெய்லர் படத்தில் நான் ரஜினிகாந்தின் மகளாக நடிப்பதாக நீண்ட நாட்களாக தகவல் வெளியாகி வந்த நிலையில், இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்று பிரியங்கா அருள் மோகன் கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களின் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இவர் நெல்சன் இன் டாக்டர் திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனால் இப்படத்தில் கண்டிப்பாக இவர் நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் இவர் கூறியுள்ள இந்த அதிர்ச்சியான தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.