வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை-2’ படத்தில் சிம்புவுடன் தனுஷும் நடிக்கிறாரா?
‘வடசென்னை-2’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்..
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படம் அவரது 49-வது படமா? இல்லை, பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படமா? என்பது குறித்த அறிவிப்பு சில தினங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் சிம்புவுடன் இணைந்து நடிப்பதாக சொல்லப்படுகின்றது. சிம்பு மற்றும் வெற்றிமாறன் காம்போவில் உருவாகும் படத்தில் சிவராஜ் குமார் நடித்தால் அதைவிட சிறப்பான சம்பவம் வேறெதுவும் இருக்காது என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
ஏற்கனவே, ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் மாஸ் காட்டியிருந்தார் சிவராஜ்குமார். அதன்பிறகு, தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் நடித்திருந்தார். இதையடுத்து, தற்போது உருவாகி வரும் ‘ஜெயிலர்-2’ படத்திலும் சிவராஜ்குமார் நடிப்பதாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் தற்போது சிம்பு -வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தில் அவர் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, தனுஷ் நடிப்பில் உருவான ‘வடசென்னை’ படத்தில் வெற்றிமாறனுக்கு முதல் சாய்ஸாக சிம்பு தான் இருந்தார். அதன் பிறகு சிம்புவால் ‘வடசென்னை’ படத்தில் நடிக்க முடியவில்லை.
இதனைத்தொடர்ந்து, தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அதே ‘வடசென்னை-2’ உலகத்தில் உருவாகும் புதிய கதைக்களத்தில் சிம்பு நடிக்கின்றார். மேலும் ‘வடசென்னை-2’ படத்தில் சிம்பு மற்றும் தனுஷ் இணைந்து நடிக்கவும் வாய்ப்புகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.
திடீரென இணைந்த சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இச்சூழலில் இப்படத்தில் சிம்பு-தனுஷ் இணைந்து நடிப்பார்களா? என அறிவிப்பும் ரசிகர்களால் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
