Web Ads

பார்வதி வீட்டுக்கு வந்த முத்து, நகையை திருட வந்த பி.ஏ.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பார்வதி வீட்டுக்கு முத்து வர, பி.ஏ நகையை திருட வீட்டுக்கு வந்துள்ளார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 04-07-25
SiragadikkaAasai Serial Today Episode Update 04-07-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. ரோகினி சத்தம் போட்டதால் விஜயா வந்து யாரையும் தூங்க விட மாட்டியா ஒழுங்கா படு என்று மிரட்டி விட்டு அனுப்பி விடு ரோகிணிக்கு தூக்கம் வராமல் உட்கார்ந்து இருக்கிறார் ஒரு கட்டத்திற்கு மேல் அமைதியாக கிச்சனுக்கு வந்து பிஏவுக்கு போன் போடுகிறார். மீனா ஓட தங்கச்சிக்கு கல்யாணம் நகையை வாங்கிட்டு வந்து வீட்ல தான் வைப்பாங்க நான் யாரும் இல்லாத நேரமா பார்த்து சொல்றேன் நீ வந்து நகையை எடுத்துக்கோ என்று சொல்ல சிட்டியும் இதுவும் நல்ல ஐடியா தான் நகை காணாம போனா அந்த சத்யா என்கிட்ட பணத்துக்கு வருவான் சம்மதம் சொல்லுமாறு சொல்ல பிஏவும் சம்மதிக்கிறார் சிட்டி நான் வேணா என்னோட ஆளுங்கள அனுப்பவா என்று கேட்பேன் அதெல்லாம் வேணாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லுகிறார்.

மறுநாள் காலையில் விஜயா டான்ஸ் கிளாஸ் சொல்லிக் கொடுத்து கொண்டு இருக்க ரதி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்ல பின்னாலேயே அவர் காதலனும் சென்று விடுகிறார் பிறகு இருவரும் ரூமில் சென்று ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் முத்து பழங்கள் பத்திரிக்கையுடன் பார்வதி வீட்டுக்கு வந்து மீனாவின் தங்கை கல்யாணத்திற்கு பத்திரிக்கை வைக்கிறார் உடனே பார்வதி முத்துவை பாராட்டி பேசுகிறார். உங்களுக்காக என்ன புரிஞ்சிருக்கு அத்தை என்று சொல்ல நீயும் எனக்கு ஒரு பையன் மாதிரி தான்பா என்று சொல்லுகிறார். நீங்க கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடனும் அத்தை என்று சொல்ல நீ பத்திரிக்கை வச்சு கூப்பிட்டால் தான் நான் வருவேனா அது நம்ம வீட்டு கல்யாணம் பா என்று சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் இருமுத்து என்று சொல்லி ரூமில் சென்று பத்தாயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு வந்து முத்துவிடம் கொடுக்கிறார். எதுக்கு அத்தை என்று கேட்க ஏதாவது செலவுக்கு வச்சுக்கபா அப்பா இல்லாத பொண்ணு நம்ப தானே பார்த்து பண்ணனும் என்று சொல்லி கொடுக்க விஜயா உன்கிட்ட என்ன பணம் அதிகமா இருக்கா என்று கேட்டு கிண்டல் அடிக்கிறார்.

முத்து நீங்களே உங்க பையன் இல்லாம தனியா இருக்கீங்க என்று சொல்ல என் பையன் இங்க வரணும்னாலும் காசு கரெக்ட்டா அனுப்பிடுவான் நீ வச்சுக்கோப்பா என்று சொல்லி வற்புறுத்தி கொடுத்து விடுகிறார். சரிங்க அத்தை கிளம்பறேன் என்று சொல்லிவிட்டு முத்து இறங்க ரூமில் சிரிப்பு சத்தம் கேட்டு வந்து திறந்து பார்க்க இருவரும் கொஞ்சி பேச முத்துவை பார்த்தவுடன் டான்ஸ் ஆடுவது போல் செய்கின்றனர். உடனே அவர்களைய அனுப்பிவிட்டு பார்வதியிடம் டான்ஸ் நடக்கிற டைம்ல அந்த இடத்தை விட்டுட்டு மீதி கதவெல்லாம் பூட்டி வையுங்க உங்க நல்லதுக்காக தான் சொல்றேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் வீட்டில் ஸ்ருதி மற்றும் மீனா நகை வாங்கிக் கொண்டு வர ரோகினி வீட்டில் இருந்து கவனிக்கிறார் உடனே நான் வெளியில் போகப்போகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்ப மீனாவும் நான் தேங்காய்,பழம் வாங்க வேண்டும் என்று சொல்ல ஸ்ருதியும் எனக்கும் கடைக்கு போகணும் என மூவரும் கிளம்பி விடுகின்றனர் மீனா வீட்டை பூட்டி சாவி வைக்கும் இடத்தை ரோகினி கவனித்து விட்டு பிஏவிடம் சொல்லி விடுகிறார்.

அவரும் ரோகினி சொன்னது போல சாவியை எடுத்து வீட்டைத் திறந்து உள்ளே வர நகையை எடுத்தாரா? இல்லையா? என்ன நடக்கிறது? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 04-07-25
SiragadikkaAasai Serial Today Episode Update 04-07-25