‘ராமாயணம்’ கிளிம்ஸ் வீடியோ ரிலீஸ்: ரசிகர்கள் அமோக வரவேற்பு..
‘ராமாயணம்’ புராணக் கதை 2 பாகங்களாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளியிலும், 2-ம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளியிலும் வெளியிடப்படும் என பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே குறிப்பிட்டுள்ளனர்.
ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ராமாயணத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ பிரமிக்க வைக்கிறது.
பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராமர் அவதாரத்தில் ரன்பீர் காட்சியளிக்கிறார். அவரது தோற்றம் அற்புதமாக உள்ளது. அவர் வில்லுடன் ஒரு போர்வீரராகத் தெரிகிறார். பின்னணியில் காடு, சூரியன் மற்றும் மேகங்களும் காணப்படுகின்றன.
அதே நேரத்தில், ரன்பீருடன் யாஷ்ஷின் தோற்றமும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது, அவர், ராவணனாக நடிக்கிறார். வீடியோவில் ராமருக்கும்-ராவணனுக்கும் இடையேயான போர் காட்டப்பட்டுள்ளது. இப்படத்தை நிதேஷ் திவாரி இயக்குகிறார். படத்தில் சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார். ஹனுமனாக சன்னி தியோல் நடிக்கிறார். மண்டோதரியாக காஜல் அகர்வாலும், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்கின்றனர்.
ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ தற்போது ரசிகர்களால் பாராட்டுகள் பெற்று வைரலாகி வருகிறது.
