Shikhar Dhawan
Shikhar Dhawan

Shikhar Dhawan – புதுடில்லி: ”ஷிகர் தவான் வேகமாக ரன்கள் சேர்க்க வேண்டும். எல்லா போட்டிகளிலும் ரிஷாப் பன்ட் கைகொடுப்பார் என எதிர்பார்க்க முடியாது,” என, டில்லி அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

இந்தியாவில் பிரிமியர் தொடரின் 12வது சீசன் நடக்கிறது. இம்முறை டில்லி கேப்பிடல்ஸ் என்ற பெயருடன் அணி களமிறங்கி உள்ளது.

முதல் லீக் போட்டியில் மும்பையை வீழ்த்திய டில்லி, கோல்கட்டாவில் நடந்த போட்டியில் (எதிர்- சென்னை) வீழ்ந்தது.

இரண்டு போட்டியிலும் துவக்க வீரர் தவான் (43 ரன்- 36 பந்து, 51 ரன்-47 பந்து) கைகொடுத்தபோதும், மந்தமாக விளையாடுவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து டில்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியது: எப்படிப்பட்ட ஆடுகளத்திலும் இறங்கியவுடன், விளாச முடியாது. தவிர, ‘பவர் பிளே’ ஓவரில் விளையாடுவது கடினம்தான்.

ஆனால், துவக்க வீரர் என்பதால் தவானின் பங்களிப்பு முக்கியமானது. போட்டியில் வேகமாக ரன் சேர்க்க வேண்டும் என்பதை இவரே உணர்கிறார்.

பேட்டிங்கின்போது, தவானின் கணுக்கால் பகுதியில் சிறிய அளவில் வலி ஏற்பட்டது.

இதையும் தாண்டி ரன்கள் சேர்க்க திணறியதும் மந்தமான ஆட்டத்திற்கு காரணமாக அமைந்தது.

ஆடுகளம் காரணமா மும்பைக்கு எதிராக ரிஷாப் பன்ட், 27 பந்தில் 78 ரன்கள் விளாசினார். இதற்காக, ஒவ்வொரு முறையும் இவர் மட்டும்பொறுப்பை தோளில் சுமக்க முடியாது. ரிஷாப் மட்டுமில்லாமல், இங்க்ராம் உள்ளிட்ட வீரர்களும் இப்படி செயல்படுவது கடினம்தான்.

இரண்டாவது போட்டி தோல்விக்கு ஆடுகளத்தை குறை கூற முடியாது. இதே ஆடுகளத்தில்தான், ‘சேசிங்’ செய்து சென்னையின் வாட்சன், ரெய்னா விளையாடினர்.

இவர்களால் மட்டும் எப்படி விளாச முடிந்தது. பந்துவீச்சு சரியில்லை என கூற மாட்டேன்.

சென்னைக்கு எதிரான போட்டியின் கடைசி கட்டத்தில் கூடுதலாக 30 ரன்கள் சேர்த்திருந்தால், வெற்றிக்கு முயற்சி செய்திருக்கலாம். இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறினார்.