இந்த வார பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் யார் என்று தெரிய வந்துள்ளது.

Sherina Evicted from Bigg Boss 6 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக சண்டையும் சர்ச்சையுமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து முதல் வாரத்தில் ஜிபி முத்து தன்னுடைய மகனின் உடல் நலக் குறைபாடு காரணமாக வெளியேறிக் கொண்ட நிலையில் சாந்தி எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து அடுத்த படியாக இந்த நிகழ்ச்சியில் இருந்து அசல் கோளாறு வெளியேறினார். இவர்கள் இருவரை தொடர்ந்து மூன்றாவது எலிமினேஷன் இன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே கிடைத்த தகவலின்படி ஷெரீனா தான் குறைந்த ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருக்கிறார் என தெரியவந்தது.

அதன்படி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவரும் ஷெரினா தான் என தெரியவந்துள்ளது. இன்றைய எபிசோடில் இது குறித்த காட்சிகள் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.