Web Ads

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் ஷாருக்கான்..

சூப்பர் ஸ்டார் ரஜினி​காந்த் நடிப்பில் நெல்சன் திலீப்​கு​மார் இயக்கி வரும் ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகுறது. இதில் எஸ்​.ஜே.சூர்​யா, சுராஜ் வெஞ்​சரமுடு, ரம்யா கிருஷ்ணன், யோகி​பாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடிக்கின்​றனர். மோகன்​லால், சிவராஜ்கு​மார் கவுரவ வேடத்​தில் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த வருடம் வெளியாக இருக்​கிறது. இந்​நிலையில் இந்தி நடிகரான ஷாருக்கானும் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடிக்க இருப்​ப​தாக கூறப்படுகிறது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படத்​தில் நடிக்க ஷாருக்​கானிடம் கேட்டதாக​வும் சில காரணங்​களால் அவர் நடிக்​க​வில்லை என்​றும் கூறப்​படு​கிறது.

அதனால், அமீர்​கான் கவுரவ வேடத்​தில் நடித்திருந்​தார். இப்போது ‘ஜெயிலர்-2’ படத்தில், ஷாருக்​கான் நடிப்​பார் என்​றும் அவர் தொடர்பான காட்​சிகள் மார்ச்சில் படமாகும் என்றும் தகவல்​கள் வெளி​யாகி​ உள்​ளன. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ரஜினி பிறந்த நாளான வருகிற 12-ந்தேதி வெளியாகலாம் எனவும் அந்நாளில் ‘தலைவர்-173’ பட இயக்குநர் யாரென்ற தகவலும் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

shahrukh khan acted as rajinikanth in jailer 2 movie
shahrukh khan acted as rajinikanth in jailer 2 movie