Web Ads

விஜய் நடிப்பில் ஒரு படம்: இயக்குநர் லிங்குசாமி வருத்தம்..

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச். வினோத் இயக்கி வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கதை இதுதான் என இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால், இப்படம் ரிலீசுக்கு முன்பாகவே வசூலில் சாதனை படைத்து வருகிறது.

‘ஜனநாயகன்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்த புகைப்படம் மற்றும் வெளியான ‘தளபதி கச்சேரி’ பாடல் ஆகியவற்றை வைத்து இது ‘பகவந்த் கேசரி’ படத்தின் கதைக்களதை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது.

பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ தெலுங்கு படம் சூப்பர் ஹிட்டானது. அந்த கதையை வைத்து சுமார் 60 முதல் 70 சதவீத காட்சிகளை ‘ஜனநாயகன்’ குழு படமாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இச்சூழலில், ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் டிசம்பர் 28-ந்தேதி மிகப் பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடைசிப் படம், கடைசி இசை வெளியீட்டு விழா, கடைசியாக ஒரு குட்டி கதை என்பதால் அனைவருக்குமே இந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், மம்முட்டி, அஜித் குமார், சீயான் விக்ரம், சூர்யா, கார்த்தி, மாதவன், விஷால், ஆகியோர் நடிப்பில் படம் இயக்கியவர் லிங்குசாமி என்பது தெரிந்ததே. ஆனால், அவரது திரைப்பயணத்தில் விஜய் நடிப்பில் இதுவரை ஒரு படம்கூட இயக்கியதில்லை. இது தொடர்பா அவர் தெரிவிக்கையில்,

‘விஜய் ரொம்ப ரொம்ப சின்சியரானவர், கடினமாக உழைப்பவர். நேரம் தவறாத நடிகர். ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டால் பாதியில் கிளம்ப மாட்டார். விஜய்யுடன் சேர்ந்து படம் பண்ண முடியாமல் போய்விட்டதே என்கிற வருத்தம் இன்னும் எனக்கு இருக்கிறது. அவரை வைத்து எடுக்கலாம் என நினைத்து மூன்று முறை நடக்காமல் போய்விட்டது’ என ஆதங்கத்துடன் கூறியுள்ளார். தற்போது இந்த பேச்சு தளபதி விஜய் ரசிகர்களால் வைரலாகி தெறிக்கிறது.

director lingusamy praises hard and sincere actor vijay
director lingusamy praises hard and sincere actor vijay