Web Ads

என்னை யாரும் ஓய்வெடுக்க சொன்னதில்லை: கமல் பேச்சு..

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான ‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து, ஸ்டன்ட் இயக்​குநர்​கள் அன்பறிவ் இயக்​கும் படத்​தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தை ராஜ்கமல் இன்​டர்​நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்​கிறது.

இந்​நிலை​யில், கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்​றில் கலந்துகொண்ட கமல்ஹாசனிடம் இன்றைய தலை​முறையினர் புதிய கூட்டணியை எதிர்பார்ப்​ப​தால் மூத்த நடிகர்​கள் ஓய்வு பெற வேண்​டிய நேரம் வந்து விட்​ட​தா? என கேள்வி எழுப்​பி​னார்.

இதற்கு கமல், ‘பு​திய கூட்​ட​ணி​கள் உரு​வாக வேண்​டும் என்​பது முக்கி​யம். பழைய விஷயங்​களுக்கு ஓய்வு கொடுப்பதை ரசிகர்களே கவனித்​துக் கொள்​வார்​கள். ஆனால், பழைய பிரபலங்​களை ஓய்வு பெறச் சொல்​வது உங்களின் வேலை. என்​னிடம் யாரும் இதுவரை ஓய்வெடுக்கச் சொன்னதில்​லை.

ஆனால், மோச​மான படங்​களில் நடிக்​கும்​போது, ஓய்வு பெற வேண்​டும் எனத் தோன்றும். அப்​போது என் நண்​பர்​கள், ‘இதோடு நிறுத்​தாதே. நல்ல படம் செய்​து​விட்டு, பின்பு ஓய்வு எடு’ என்று சொல்​வார்​கள். நான் இன்​னும் அப்படிப்பட்ட ஒரு நல்ல படத்தை தான் தேடிக் கொண்​டிருக்​கிறேன்​’ என்​றார்​.

kamal haasan speaks about lifestyle of cinema work
kamal haasan speaks about lifestyle of cinema work