குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சீரியல் நடிகை கண்மணி- அஸ்வத் ஜோடி, என்ன பெயர் தெரியுமா?

Web Ads

கண்மணி அஸ்வத் ஜோடி அவர்களது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளனர்.

Serial actress Kanmani-Ashwath couple who held the baby naming ceremony
Serial actress Kanmani-Ashwath couple who held the baby naming ceremony

தமிழ் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் கண்மணி மனோகர். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமி என்ற தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இது மட்டும் இல்லாமல் சமீபத்தில் மகாநதி சீரியலிலும் நடித்து விரைவில் வெளியேறினார். இவருக்கும் சன் டிவி தொகுப்பாளரான அஸ்வத் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தனர்

சமீபத்தில் இந்த ஜோடிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தனர். தற்போது அந்த குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவை நடத்தியுள்ளனர் அதில் குழந்தைக்கு “துருவ் யாத்ரா அஸ்வத்” என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kanmani manoharan (@kanmani_aswath)