படம் தொடங்குவதற்கு முன்பாகவே சீனு ராமசாமி மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோரின் படத்திற்கு விருவிருப்பான வியாபாரம் தொடங்கியுள்ளது.

Seenu Ramasamy Upcoming Movie Business : தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் மாமனிதன் என்ற திரைப்படம் அடுத்ததாக வெளியாக உள்ளது. மாமனிதன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் ஜூவி பிரகாஷ் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் நாயகியாக காயத்ரி சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

படம் தொடங்குவதற்கு முன்பே சீனுராமசாமி, ஜிவி பிரகாஷ் படத்துக்கு தொடங்கிய விருவிருப்பான வியாபாரம்

படத்தினை ஸ்கை மேன் இன்டர்நேஷனல் ஆக்சன் திருமணத்தின் மூலமாக கலைமகன் முபாரக் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தேனி, ஆண்டிப்பட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது. ரகுநந்தன் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

கட்டுப்பாடு பகுதிகள், 5 மாவட்டத்தில் இல்லை : தமிழக அரசு அறிவிப்பு

படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில் இந்த படத்திற்காக இரண்டு OTT நிறுவனங்கள் வியாபாரத்திற்கான பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தை OTTயில் வெளியிடுவதா அல்லது திரையரங்குகளில் வெளியிடுவதா என படக்குழு யோசித்து வருகிறது.

Vijay-யுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி – Beast Update சொன்ன Pooja Hegde! | Nelson Dilipkumar