Seeniyammal-Patti
அஜித், விஜயுடன் இணைந்து நடித்த சீனியம்மாள் பாட்டி அவர்களுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தல அஜித்தின் விஸ்வாசம் மற்றும் தளபதி விஜயின் மெர்சல் ஆகிய படங்களில் நடித்திருந்தவர் சீனியம்மாள் பாட்டி.

இவர் தற்போது தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார், அந்த பேட்டியில் விஜய் தம்பி, அமைதியான தம்பி நான் சிரிச்சா சிரிக்கும். அவ்வளவு தான். நான் பேசணும்னு நினைச்சா கூட பேச முடியாது. செக்கூரிட்டிங்க பேச விடமாட்டாங்க என கூறியுள்ளார்.

ஆனால் அஜித் தம்பி அப்படி இல்லை, என்னை பார்த்ததும் வந்து பக்கத்துல உக்கார்ந்து கிட்டு மனசார பேசும். எனக்கு அஜித் தம்பியை ரொம்ப ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார்.

மேலும் ரஜினிகாந்தும் நல்லா பேசுவார், வீட்டை நலம் விசாரிப்பார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.