அப்பா அம்மாவாகி உள்ளனர் நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா.

Sayyesha Blessed With Baby Girl : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவரது நடிப்பில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. சில தினங்களுக்கு முன்னர் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

அம்மா அப்பாவான ஆர்யா சாயிஷா.. உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகர் விஷால் - என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா?

இந்த உற்சாகத்தில் இருக்கும் ஆர்யா தற்போது அப்பாவாகி இருப்பது மேலும் மகிழ்ச்சியை கூட்டியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்து கொண்டார். தற்போது சாயிஷாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இன்று ஒலிம்பிக் திருவிழா : முதலிடம் பெற்ற 17 வயது சிறுவன் ‘தில்லு’

இதனை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால். நான் மாமாவாகிட்டேன். மகிழ்ச்சியாக உள்ளது என கூறி ஆர்யா மற்றும் சாயிஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.

பல பேரை நம்பி மோசம் போய்ட்டேன்! – PowerStar Srinivasan Latest SPeech | Vanitha Vijayakumar

விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து எனிமி படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.