பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளனர். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபலம் முன்னணி இசை அமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் ஆவார். யுவன் முதல் முதலில் 1997 ஆம் ஆண்டில் வெளியான அரவிந்தன் என்னும் படம் மூலம் இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை, நந்தா, ராம், பருத்திவீரன், பில்லா, மங்காத்தா என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து வந்தார்.

இவர் தற்போது வரை 150 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் பேவரைட் இசையமைப்பாளராக தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் தற்போது வரை 25 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ள யுவன் சங்கர் ராஜாவுக்கு தற்போது கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது சென்னையில் செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா கல்லூரியில் நடைபெற்ற 31வது பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் யுவனின் ரசிகர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை யுவன் சங்கர் ராஜாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.