
Vijay & Shanthanu : சர்கார் திருட்டு கதை விவகாரம் முடிவுக்கு வந்ததை அடுத்து நடிகரும் விஜயின் தீவிர ரசிகருமான சாந்தனு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் சர்கார். இந்த படத்தின் கதை திருட்டு விவகாரம் இன்று ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
செங்கோல் என்ற என்னுடைய கதை தான் சர்கார் என வழக்கு தொடர்ந்திருந்த வருண் ராஜேந்தர் விஜய் சர்கார் அமைக்க தன்னுடைய செங்கோலை விட்டு கொடுப்பதாக கூறியிருந்தார்.
இதனையடுத்து பாக்யராஜ் செய்தியாளர்களை சந்தித்த போது இருவரும் சமரசமாக சென்றது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
ஆனால் இந்த விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது நான் தான். ஷாந்தனுவை விஜய் ரசிகர்கள் பலர் ட்விட்டரில் திட்டி இருந்தனர் என கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது சாந்தனு பிரச்சனை என்றால் தலைவனை மாற்றுகிற ஆள் நான் இல்லை என கூறி ட்வீட் செய்துள்ளார்.
சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் “இல்லை” !
என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான் !
Apologies on Story reveal by appa #UnavoidableCircumstance Sincere apologies though ????????
தீபாவளியை கொண்டாடுவோம்
Sarkar கொண்டாடுவோம் ! ???? pic.twitter.com/XXU4Nd0h0w— Shanthnu Buddy (@imKBRshanthnu) October 30, 2018