
சர்கார் ரிலீஸ் : சர்கார் படம் தமிழகத்தில் மட்டும் எத்தனை தியேட்டர்களில் வெளியாகிறது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மேலும் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க வரலட்சுமி சரத்குமார் வில்லியாகவும் ராதா ரவி வில்லனாகவும் நடித்துள்ளனர். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
வரும் நவம்பர் 6-ம் தேதி வெளியாக உள்ள இந்த படம் தமிழகத்தில் மட்டுமே மொத்தம் 650 தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் தியேட்டர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிரு பிடிச்சவன் சுமார் 200-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
சர்கார் படத்துடன் பாலிவுட் நடிகரான அமீர் கான் நடிப்பில் தங்ஸ் ஆப் இந்தோஸ்தான் என்ற படமும் வெளியாக இருப்பதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.