
Sarkar Issue : தளபதி விஜயின் சர்கார் படம் தமிழக அரசால் மிக பெரிய சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த படம் சர்கார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருந்த இந்த படம் ரிலீஸுக்கு முன்பும் மிக பெரிய சர்ச்சைகளை சந்தித்து இருந்தது.
அதே போல் ரிலீசுக்கு பின்னரும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. தமிழக அரசின் இலவச பொருட்களான மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை தூக்கி வீசும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருந்தன.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுக சர்கார் படத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் அதிகமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு இருந்தனர்.
இதனையடுத்து சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சையான காட்சிகள் நீக்கப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்ததாக பிரபல விநியோகிஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்து இருந்தார்.
இது குறித்து தற்போது ரஜினி, கமல் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாகவும் அதிகமு-விற்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளனர்.
இது குறித்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் பதிவிட்டுள்ள ட்வீட் இதோ
முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 8, 2018
தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
— Rajinikanth (@rajinikanth) November 8, 2018