
போலந்திலும் சர்கார் : தளபதி விஜயின் சர்கார் படம் போலந்து நாட்டிலும் புதிய சாதனையை படைத்து தமிழ் சினிமாவையே அதிர வைத்துள்ளது.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படம் உலகம் முழுவதும் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.
இந்தியா மட்டுமில்லாமல் ஓவர்சீஸ் நாடுகளிலும் சர்கார் பிரம்மாண்டமாக வெளிவர உள்ளது. போலந்து நாட்டிலும் சர்கார் Warsaw, Krakow, Wroclaw, Gdansk என 4 முக்கிய இடங்களில் வெளியாக உள்ளது.
போலந்து நாட்டில் 4 இடங்களில் தமிழ் படம் வெளியாவது இதுவே முதல் முறை. இதனால் இந்த சாதனையையும் சர்கார் தட்டி சென்றுள்ளது.
மேலும் போலந்து நாட்டில் சர்கார் படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை 7th Sense Cinematics என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
சிவகாரத்திகேயனின் சீமராஜா படத்தை தொடர்ந்து இந்நிறுவனம் சர்கார் படத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.