பெரிய கூட்டணியுடன் சந்தோஷ் பிரதாப் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கி உள்ளன.

Santhosh Pradap in New Movie : BLACKHOLE PICTURES PRODUCTIONS சார்பில், M MANIRATHINAM வழங்கும், AR.ஸ்டீபன் ராஜ் இயக்கத்தில்,சந்தோஷ் பிரதாப்-மகேந்திரன்-மைக்கேல் தங்கதுரை நடிப்பில், புதிய ஹைப்பர்லிங்க் கிரைம்-த்ரில்லர் திரைப்படம் இனிதே துவங்கியது !

இளம் தலைமுறையினரின் புது முயற்சிகள் தமிழ் திரைத்துறைக்கு நனமதிப்பை அளித்து வருகிறது. தமிழ் திரையுலகில் தனது திறமையை படிப்படியாக கூர்மை தீட்டிக் கொண்டிருக்கும் மாஸ்டர் மகேந்திரன், சிறந்த திரைக்கதைகள் மூலம், தன்னை திரைத்துறையில் பதிவு செய்திருக்கும் மைக்கேல் தங்கதுரை, தனது நடிப்பு மற்றும் கடின உழைப்பால் தனக்கென தனி இடத்தை பெற்றிருக்கும் நடிகர் சந்தோஷ் பிரதாப் மூவரும் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கின்றார்கள். ஒரு மிகச்சிறந்த கதையை தேர்வு செய்திருப்பது இப்படத்தை இன்னும் சிறப்பாக்கியுள்ளது.

ஒரு தனித்துவமான கதையை தேர்ந்தெடுக்கும் முயற்சியின் இறுதியில் அவர்கள் ஒரு ஹைபர்லிங் திரைக்கதையில் இணைந்திருக்கிறார்கள். இந்த புதிய தலைமுறையில் ஹைப்பர்லிங்க் வகை அடிப்படையிலான திரைப்படங்களுக்கு, அனைத்து தரப்பினரிடமிருந்தும், பெருமளவில் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. இந்த வகையில் புதிய முயற்சியாக BLACKHOLE PICTURES PRODUCTIONS சார்பில், M MANIRATHINAM வழங்க, AR. ஸ்டீபன் ராஜ் இயக்கத்தில், “Production No: 1” இனிதே துவங்கப்பட்டுள்ளது. இன்னும் தலைப்பிடப்படாத இந்த புதிய ஹைப்பர்லிங்க் கிரைம்-த்ரில்லர் திரைப்படத்தில், சந்தோஷ் பிரதாப்-மகேந்திரன்-மைக்கேல் தங்கதுரை முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தனது குறும்படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் AR. ஸ்டீபன் ராஜ், திரைத்துறையில் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.இப்படத்தில் பங்குபெறும் நடிகர் நடிகையர்கள், மற்றும் தொழில்நுட்ப குழுவினர் கலந்துகொள்ள, இன்று இப்படத்தின் பூஜை எளிமையான சடங்குகளுடன் துவங்கியது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.